இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

கியோட்டோ வரைமுறை

கியோட்டோ வரைமுறையில் பங்களிப்பு

  • கையெழுத்திட்டு ஏற்கப்பட்டது
  • கையெழுத்திட்டது இன்னும் ஏற்கப்படவில்லை
  • கையெழுத்திட்டது இன்னும் ஏற்க மறுப்பு
  • கையெழுத்து இடாதவை

முன்னுரை
கியோட்டோ வரைமுறை என்பது பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் மட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பு நடைமுறைகள் என்பதற்கான வரைமுறையாக குறிக்கும். இதன் நோக்கம் தட்பவெப்ப நிலைகளில் ஆபத்தான மாற்றங்களை உண்டாக்காத அளவுக்கு பசுமை கூடக வளிமங்களின் செறிவை சமநிலையில் வைத்திருப்பதாகும். நான்கு பசுமை கூடக வாயுக்கள் (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, கல்பர் ஹெக்ஸாபுளோரைடு) மற்றும் தொழில்மய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு தொகுதி வளிமங்கள் (ஐதரோபுளோரோகார்பன்கள் மற்றும் பேர்புளோரோகார்பன்கள்) போன்றவற்றை குறைப்பதற்காக கியோட்டோ வரைமுறை உருவாக்கப்பட்டது. முதலில் 1997 டிசம்பர் 11ல் ஜப்பானின் கியோட்டோவில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் 2005 பிப்ரவரி 16 ல் மற்ற நாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 183 நபர்கள் இந்த வரைமுறை ஏற்கப்பட்டுள்ளது. கியோட்டோவின் அடிப்படையில் தொழில்நுட்ப நாடுகள் 1990 வருடத்தை விட பசுமை கூடக வாயுக்களின் செறிவு வெளியீட்டை 5.2 சதவிகிதம் குறைந்துள்ளது. பன்னாட்டு வரையானது ஐரோப்பிய ஒன்றியம் 8% பிற நாடுகளான ஐக்கிய அமெரிக்கா 7% ஜப்பானுக்கு 6% மற்றும் ரஷ்யாவுக்கு 0% ஆகும். இந்த உடன்பாடு ஆஸ்திரேலியாவை 8% மற்றும் ஐஸ்லாந்துவை 10% என சதவிகிதத்தில் பசுமை கூடக வாயுக்களின் வெளிப்பாட்டை உயர்ந்த அனுமதித்துள்ளது.
கியோட்டோவுடன் இணக்குமுள்ள இயக்கமுறைகளான வாயு வர்த்தகம், சுகாதார மேம்பாடு இயக்கமுறை மற்றும் கூட்டு நடைமுறைகள் போன்ற இயக்க முறைகள் மூலம் கியோட்டோவின் இணைப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பசுமை கூடக வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அதாவது இணைப்பு ஒன்றிலுள்ள நாடுகள் இணைப்பில் இல்லாத நாடுகளில் பசுமை கூடக வாயுக்களின் வெளியேற்றத்தை தடுப்பதற்கு வழிவகுத்து சமநிலைப்படுத்துகிறது. இந்த முறையில் இணைப்பில்லாத நாடுகளில் பசுமை கூடக வாயுக்களை தடுக்க எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆனால் கியோட்டோவின் இணைப்பில் உள்ள நாடுகள் இணைப்பில்லா நாடுகளில் GHG வெளியேற்ற தடுப்பு திட்டத்தை செயல்படுத்தி கார்பனை சேகரித்து இந்த கார்பனை வாங்கும் நாடுகளாக திகழ்வது நிலை மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் கியோட்டோவின் இணைப்பிலுள்ள நாடுகள் (அதிக தொழிற்சாலை கொண்ட நாடுகள்), வெளியேற்றும் மாசுபாடுடைய வாயுக்களை மேலே கூறப்பட்ட இயக்கமுறையின் மூலம் இணைப்பில்ல நாடுகளில் நடத்தப்பட்ட திட்டத்தினால் (கார்பன் சேகரிப்பு) சமநிலைப்படுத்துகிறது.
கியோட்டோ இணைப்பில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தேசிய அதிகாரமுடைய பசுமை கூடக வாயு இலாக்காவை வடிவமைக்கிறது. இணைப்பிலுள்ள நாடுகளான ஜப்பான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஸ்பெயின், மற்றும் பிற நாடுகள் அரசாங்க கார்பன் நிதியை ஊக்குவித்தல், பலதரப்பட்ட கார்பன் சேகரிப்பு நாடுகளிடமிருந்து வாயுக்களை சமநிலைப்படுத்துதல் மற்றும் அதிக பயன்பாட்டிலுள்ள ஆற்றல் எண்ணெய் மற்றும் வாயு மற்றும் வேதிப்பொருட்களுடன் செயலாற்றுதல் போன்ற செயல்களை செய்கின்றது. இதனைத் தொடர்ந்து இணைப்பில்லா நாடுகள் தேசிய அதிகாரமுடைய பசுமை கூடக வாயுக்களின் திட்டத்தினை கியோட்டோ வரைமுறையின் மூலம் கையாளுகின்றன.

குறிக்கோள்கள்
வளிமண்டலத்தில் காலநிலை மாறுபாட்டினால் ஏற்படும் அபாயத்தினை தடுப்பதற்காக பசுமை கூடக வாயுக்களின் அளவை நிலைநிறுத்துதல் ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.
காலநிலை மாறுபாட்டின் இடைப்பட்ட அரசாங்க குழுக்கள் (IPCC), சராசரி உலக வெப்பநிலையானது 1.4டிகிரி செல்சியஸ் (2.50 F) லிருந்து 5.8 டிகிரி செல்சியஸாக (10.40 F) 1990 மற்றும் 2100 ஆண்டில் உயரும் என முன்னுரைத்துள்ளது.
இதற்கு ஆதாரவாளர்கள் கூட இந்த குறிக்கோளை அடைவதற்கு பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பினை எதிர்கொள்ள கியோட்டா தான் முதல் அடிப்படை நிலை என கூறியுள்ளனர்.
இந்த கியோட்டா, ஜப்பானில் டிசம்பர் 1997 ல் உடன்படிக்கை செய்யப்பட்டு 1998 ம் ஆண்டின் மார்ச் 16 ம் தேதி கையெமுத்திட்டு திறக்கப்பட்டது. ஆனால் 1999 ல் மார்ச் 15 ம் தேதி மூடப்பட்டது.
2004 ம் ஆண்டு நம்பர் 18 ல் ரஷ்யா இந்த கியோட்டா முறையை புதுப்பித்து 2005 ம் ஆண்டு பிப்ரவரி 16 ல் மஞபடியும் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது இதனைத் தொடர்ந்து 2008 ன் மே மாதம் வரை மொத்தம் 181 நாடுகள் மற்றும் ஒரு பொருளாதார ஒன்றிணைப்பு போன்றவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கியோட்டா வரைமுறையின் 5 முக்கிய கொள்கைகள் பின்வருமாறு

  • கடமை: இந்த வரைமுறையானது கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாடுகள் மற்ற பொதுவான உறுப்பு நாடுகள் போன்ற நாடுகளின் மூலம் பசுமை கூடக வாயு வெளியேற்றத்தினை குறைபவ்பதற்கு கையாளப்படும் கடமைகளை செயலாற்றுவதாகும்.
  • செயலாக்கம்: வரைமுறையின் குறிக்கோள்களை நிறைவு செய்ய கையெழுத்திட்ட நாடுகள் அதற்குரிய நாடுகளின் மூலம் பசுமை கூடக வாயுக்களை குறைப்பதற்கு சரியான திட்டங்கள் மற்றும் அளவீடுகளை தயாரிக்கிறது. மேலும் இவை பல்வேறு இயக்கமுறைகளான கூட்டு செயலாக்கம் தூய்மை மேம்பாட்டு இயக்க முறை மற்றும் வாயு வெளியேற்ற வர்த்தகம் போன்றவற்றின் மூலம் வாயுக்களை உட்கிரகிக்கும் அளவினை அதிகரிக்கிறது.
  • காலநிலை மாறுபாட்டின் தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தினை செயலாற்றுவதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளில் தாக்கத்தினை குறைக்கப்படுகிறது.
  • வரைமுறையின் ஒருமைப்பாட்டினை கணக்கீடு திட்ட அறிக்கை மற்றும் திறனாய்வு போன்றவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது
  • முறையீடு: வரைமுறையின் செயல்திட்டத்தில் ஏற்படும் முறையீட்டுகளை தவிர்க்க ஒரு குழுவானது செயல்படுத்தப்படுகிறது

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015